Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஆயுத மோதல்கள் தொடர்ந்த காலத்திலும், அதன் பின்னராக காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழல் காணப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

'இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015' என்ற அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வெளியிட்டது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், இலங்கை படைகள் மற்றும் பொலிஸார் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

சிறைகளில் அதிகளவிலானோர் அடைக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றொரு பாரிய மனித உரிமைப் பிரச்சினையாகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் இன்னமும் பிரச்சினையாக உள்ளன.

பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது. ஆயுத மோதல்களின் போதும், மோதல்களின் பின்னரும், குற்றமிழைத்தவர்கள், குறிப்பாக சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை பரந்தளவில் தொடர்கிறது.

இலங்கை அரசாங்கம், ஒரு தொகையான இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலைகள், கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கொலைகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், பழைய மற்றும் புதிய வழக்குகளில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.” என்றுள்ளது.

0 Responses to இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர்: அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com