Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக விடயங்களை மேற்கொள்ளும் போது மனித உரிமை விவகாரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் சமூகத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியமானது என்று கூறியுள்ள ஜெர்மி கொர்பைன், “தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு தொழிற் கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரித்தானியத் தொழிற்கட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com