காங்கிரஸில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பிரிந்த ஜி.கே.வாசன், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமாகா எந்தக் கட்சியில்
இணையும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவிய நேரத்தில் அதிமுகவில் இணைய ஆர்வம் காண்பித்து வந்தார் ஜி.கே.வாசன். ஆனால், அதிமுக வாசனுடன் கூட்டணி அமைக்காத நிலையில், மீண்டும் காங்கிரஸில் இணையலாம் என்று,
இவிகேஎஸ்.இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.
ஆனால், ஜி.கே.வாசன், தமது இயக்கத்தை மக்கள் நலக் கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் தமாகா அதிருப்தியாளர்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் தம்மை காங்கிரஸில் மீண்டும் இணைத்துக்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் உடனிருந்தார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
0 Responses to தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பீட்டர் அல்போன்ஸ்