புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்மொழிந்த யோசனைகள் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 49வது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை கட்டிடத்தில் ஆரம்பமானது.
இதன்போதே, வடக்கு மாகாண சபையினால் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள் முழுமை பெறாத காரணத்தினால் அதன் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்காக வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புக்கான கொள்கை வரைவுத் திட்ட யோசனைகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

0 Responses to வடக்கு மாகாண சபை முன்மொழிந்த அரசியலமைப்பு யோசனைகள் மீதான விவாதம் ஒத்திவைப்பு!