Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை, சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க  இன்று வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது,  நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொண்டார் சோங் தாவோ.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனத் தொழிற்சங்கக் கட்சிக்கும் இடையிலான உறவு ஸ்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட போது, இலங்கை அரசாங்கத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனுமுள்ள நீண்டகால நட்புறவினை சோங் தாவோவும் நினைவுகூர்ந்து உரையாடினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நிலை புரிந்துணர்வுடன் மேலும் தொடரும் எனவும்  சந்திப்பின்போது இருவரும் பரஸ்பர நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

0 Responses to சீனா இலங்கை உறவு மேலும் தொடரும் - ரணிலிடம் சோங் தாவோ நம்பிக்கை தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com