Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பனாமா  பேப்பர்ஜ் விவகாரம் காரணமாகப் பதவி துறந்த ஐஸ்லாந்து பிரதமர்  சிக்முண்டர் டேவிட்டின் இடத்திற்குப் புதிய பிரதமராக விவசாயத் துறை அமைச்சர் சிகுர்தர் இங்கி ஜோகன்சனை ஆளும் கூட்டணி  அரசு தேர்ந்தெடுப்பதாக  அறிவித்துள்ளது.

நாட்டின் அதிபரிடமிருந்து  உத்தியோகபூர்வமான ஒப்புதல் கிடைத்ததும்,  புதிய பிரதமர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக  சிக்முண்டர் டேவிட்டம்,  அவரது மனைவியும் இருப்பதாக, மொசாக் பொன்செகா எனும் சட்ட நிறுவனம் வெளியிட்ட பனாமா பேப்பர்ஸ்  ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டில் அவர் பல கோடி டாலர் பணத்தை பதுக்கியிருந்ததாக எழுந்த எதிர்ப்புக்கள் வலுவடைந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐஸ்லாந்தின் புதிய பிரதமர் விரைவில் பதவியேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com