சட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிட்டுள்ள இலங்கையர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊழல் எதிர்ப்புக் குரல் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த சட்டவிரோத நபர்களிடம் விசாரணைகளை நடத்தி சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரிகளை அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தை ஏமாற்றும் வகையில் கடந்த பத்து வருடங்களில் கூடுதல் பணம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் வெளியான பனாமா பத்திர தகவல்களின் படி அமைச்சர் ஒருவரின் ஆலோசகரின் பெயரும் அதில் உள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு எதிரான விசாரணைகளை மத்திய வங்கி முன்னெடுக்கவேண்டும். சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம்.
ஏற்கனவே மத்திய வங்கியில் இடம்பெற்ற திறைசேரி முறி விவகாரத்தில் மத்திய வங்கி ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால் இது குறித்த விசாரணைகளை அவர் தனியாக நடத்த முடியாது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 180 மோசடிகள் குறித்து சாட்சியங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மஹிந்த அரசாங்கத்தில் மோசடிக் காரர்களாக இருந்தவர்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் நல்லவர்களாகிவிடுகின்றனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைத்திரி, ரணில் அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்பட்டு வருகிறது.
மஹிந்த குடும்ப ஆட்சி செய்தார், மகள், மருமகன், சகோதரர் என உறவினர்களைக் கொண்ட ஆட்சியை மைத்திரி செய்கிறார். கட்சியின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேன எந்தக் கள்வர்களையும் தன்னுடன் வைத்துக் கொள்ள நினைக்கின்றார்.
மறுபக்கத்தில் பிரதமர் என்ற அதிகாரத்தை வைத்துக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க, மோசடிக் காரர்களின் 'பைல்களை' விசாரிப்பதும் தமது பக்கம் இழுப்பதற்காக அவற்றை இடைநிறுத்துவதுமாக செயற்படுகிறார். கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகவே அரசு செயற்படுகிறது.” என்றுள்ளார்.

0 Responses to சட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகளில் வைப்பிலிட்டவர்களை கைது செய்ய வேண்டும்: ஊழல் எதிர்ப்புக் குரல்