Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சாதாரண பொது மக்களுக்கு சுமையாக அமையும் எந்தவொரு வரி விதிப்பும் செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தத்திற்கு அரசாங்கம் தயாராவதாக அண்மையில் ஒருசில ஊடகங்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஏழை பொது மக்களுக்கு இன்னல் தரும் எந்தவிதமான வரி அதிகரிப்பிற்கும் தான் இடமளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவ்வாறான யோசனைகளை முன் வைக்கும் பொருளியல் நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதை விடுத்து, நாட்டின் பொருளியல் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தான் தயார் இல்லை என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலர்ந்த தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக புலத்திசிபுற மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு இன்று திங்கட்கிழமை முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு கூடுதலான பொருளாதார நன்மைகளை வழங்கி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சாதாரண மக்களுக்கு சுமையாக அமையும் வரி விதிப்புக்கு இடமில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com