கேரள கோயிலில் ஏற்பட்ட வெடி விபத்துத் தொடர்பாக ஐந்து பேரைக் கைது செய்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
கொல்லத்தில் புகழ்ப்பெற்ற புட்டிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் பட்டாசுகள் கொண்டாட்டத்திற்கு வெடிக்கப்பட்டதில், பட்டாசுக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர்.
300க்கும் மேற்பட்டவர்கள் படு காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படாததுதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோயில் நிர்வாகியும் படுகாயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்நிலையில் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர் உட்பட 5 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 Responses to கேரள வெடி விபத்துத் தொடர்பாக ஐந்து பேர் கைது