Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்தோடு ஆலோசனைகளை நடத்துவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால், குறித்த செயற்திட்டங்களில் இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பில் தம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதடியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம் உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உதவிப்பாலம் என்ற மக்கள் பயன்பெறும் திட்டத்தின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் பலருக்கும் பலவிதமான உதவிகளை நாம் செய்து வருகின்றோம். எனினும் பாரிய திட்டங்களையே உலகம் எதிர்பார்க்கின்றது. ஆனால், அத்திட்டங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மத்திய அரசாங்கத்தினாலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் எங்களிடம் கேட்காது எமது அலுவலர்களுடன் மட்டும் கலந்தாலோசித்தே இவ்விதமான பாரிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ‘நெல்சிப்’ போன்ற பாரிய செயற்திட்டங்களில் ஊழல் நடைபெற்ற போது எம்மால் அதுபற்றி நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாக இருந்தது.

எமது மாகாணத்திற்குரிய எந்த பாரிய செயற்றிட்டமானாலும் எமக்கூடாகவே அவை மத்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடமைக்காகக் கடிதம் அனுப்பி தாம் நினைத்தவாறு நடந்து கொள்வதை நாம் கண்டித்து வருகின்றோம். 65000 பொருத்து வீடுகள் திட்டமும், தான்தோன்றித்தனமாக, எமது பங்கு பற்றல் எதுவுமின்றியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்திட்டம்.

எமது பங்கு பற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை. எம்மை மதிக்கவில்லை என்பதற்காக நாம் கோரவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்தால் மக்கள் சார்பான கருத்துக்களை வெளியிடலாம் என்ற எண்ணத்திலேயே, எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டுகின்றோம். அத்துடன் அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பகிர்வு என்று வாய் கிழியக் கத்திவிட்டு, இதைக்கூட எமக்குத் தெரியாமல் செயற்படுத்த முன்வந்தால் மத்தியின் உண்மையான மனநிலை என்ன என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும்.” என்றுள்ளார்.

0 Responses to மத்திய அரசு மாகாண அரசிடம் ஆலோசித்து செயற்திட்டங்களை முன்னெடுப்பதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com