கேரள முதல்வர் உம்மன் சாண்டி அலுவலகத்தில், தாம் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப் பட்டதாக சரிதா நாயர் பரபரப்புக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மின் விளக்கு முறைகேட்டில் சிக்கி, தற்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வரும் சரிதா நாயர்,இந்த முறைகேடுகளில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பங்கு உள்ளதாக கூறியுள்ளார். இதுத் தொடர்பான விசாரணைக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், உம்மன் சாண்டி அலுவலகத்தில் அவரால் தாம் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டேன் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்கட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதுக் குறித்து விசாரணைக் குழுவுக்கு 24 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அளித்துள்ளதாகவும் சரிதா நாயர் கூறியுள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள உம்மன் சாண்டி தேர்தல் நேரத்தில் உள் நோக்கத்துடன் சரிதா நாயர் தம்மீது குற்ற,ம் சாட்டியுள்ளார் என்றும், இவர் முன்பு தம்மை தமது தந்தையார் போல என்று கூறி வந்தார் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to உம்மன் சாண்டி அலுவலகத்தில் பாலியல் ரீதியாக தவறான அணுகு முறை:சரிதா நாயர்