சீன அரசின் அழைப்பையேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை சீனாவுக்கு செல்லவுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி ஹீ ஜிங்பிங், பிரதமர் லீ கெக்கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் ஜாங் டிஜியாங்க் ஆகிய உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்கின்றார்.
பொருளாதார விவகாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய விடயங்களில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்த பொறிமுறைகள் பற்றி இவ்விஜயத்தின் போது முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இது மாத்திரமன்றி விஞ்ஞானம், விளையாட்டு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதிச் சேவைகள் மற்றும் நீர்வள முகாமைத்துவம், சிறுநீரக நோயை கட்டுப்படுத்த நடமாடும் சிகிச்சை உள்ளிட்ட விடயதானங்களில் சீனாவின் ஒத்துழைப்பைப் பெறுவது பற்றியும் பிரதமர் தனது விஜயத்தின் போது கலந்துரையாடல்களை நடத்தவிருக்கின்றார். இவ்விஜயத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

0 Responses to ரணில் நாளைமறுதினம் சீனாவுக்கு பயணம்; முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!