வடக்கு மாகாணத்தில் தொடரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பொன்றுக்காக அவசரமாக அழைத்துள்ளார்.
இதன்பிரகாரம், இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வில், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களால் மிகக் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், "வடக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்குபற்றவுள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தச் சந்திப்பு நடைபெறும். எனவே, உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த காணிப் பிரச்சினைகள் தொடர்பான விபரத்தை எனக்கு தந்தால், ஜனாதிபதியுடன் பேசுவதற்கு இலகுவாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அடையாளம் காணப்பட்ட 108 பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கு, எதிராக மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

0 Responses to வடக்கின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய சி.வி.விக்னேஸ்வரனுக்கு, மைத்திரி அழைப்பு!