பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் வெளிவிவகார அமைச்சும், நீதி அமைச்சும் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், புதிய சட்டத்தின் நகல் வரைவுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக அமைக்கப்படும் புதிய சட்டத்தில் முக்கிய பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். சைபர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயங்களும் அதில் உள்ளடக்கப்படும். சர்வதேச மட்டத்தில் தீவிரவாத செயற்பாடுகள் இணைத்தின் வாயிலாக முன்னெடுக்கபட்டு வருகின்ற நிலையில் இந்த சட்டத்தில் சைபர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயங்களும் உள்ளடங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்; நகல் வரைவுப் பணி ஆரம்பம்: கருணாசேன ஹெட்டியாராச்சி