இலங்கையின் முன்னணி ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளின் போது தகவல்களை மூடி மறைத்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாஜூதீன் 2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை, விபத்து என்று அப்போது விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அது, கொலை என்று தெரியவந்துள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியே தகவல்களை மறைத்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திவருவதாகவும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வசீம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணை; பொலிஸ் அதிகாரி கைது!