Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ஜனாதிபதித் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்த முடிவு உறுதியானது. அதில், மாற்றம் ஏதும் இல்லை.“ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட விடயமல்ல. அது, பாராளுமன்றத்தின் பொறுப்பு. நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பதற்கான அனுமதியை நான் பூரணமாக வழங்கியுள்ளேன். ஆகவே, நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது பாராளுமன்றத்திலுள்ள 225 பேருமாகும். நான் மீண்டுமொருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அது இறுதியான முடிவு.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com