முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தலைவியாக காலாவதியாகிவிட்டார் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
படுவஸ்நுவரவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் எழுந்துள்ளது. எமது கட்சியின் முன்னேற்றத்திற்கான காரணிகள் எவை? ரணில் விக்ரமசிங்கவின் காரணிகள் அல்ல. எமது கட்சியின் முன்னேற்றத்திற்கு அவர் எதிரானவர். அடுத்த வாரமளவில் பகையைக் காண்பிப்பார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் போது, அக்கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் பிரிந்து செல்வார்கள். கபீர் ஹாசீமின் பதவி பறிபோகும். அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க நியமிக்கப்படுவார்கள். மைத்திரிபால சிறிசேனவிடம் எவ்வாறு செல்வது என்று ஒரு குழுவினர் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான காரணிகளை நாம் பகையாக்கக்கூடாது. இதனாலேயே நான் தற்போது சந்திரிக்கா பண்டாரநாயக்கவை திட்டுகின்றேன். அவருக்கு ரணில் சாதகமான ஒருவர். மஹிந்த எதிரி. அது தவறாகும். கட்சியை செயற்படுத்திய எமது தலைவி தற்போது காலாவதியாகியுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு ஒன்றைக் கூறவேண்டும். மைத்திரிபால சிறிசேன சாதகமானவர். அவரை எதிரியாக்க வேண்டாம்.” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்கா குமாரதுங்க ‘தலைவி’யாக காலாவதியாகிவிட்டார்: டிலான் பெரேரா