மது ஆலைகளை நடத்தும், திமுகவும், அதிமுகவும், மதுவிலக்குக் குறித்துப் பேசுவது வேடிக்கையானது என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், இக் குற்றச்சாட்டை முன் வைத்து உரையாற்றினார். அவர் மேலும் தனதுரையில் இக்குற்றசாட்டுத் தொடர்பில், மேற்குறித்த இரு கட்சிகளும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடரட்டும் எனச் சவாலும் விடுத்தார்.
இதேவேளை திருவாரூர் மாவட்டத் திருத்துறைப்பூண்டியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், மதுக்கடைகளை திறந்த கட்சிகளே மதுவிலக்கு குறித்து பேசுவதாகவும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கான உதாரணங்கள் இவை எனவும் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to திமுக, அதிமுகவின் மதுவிலக்குக் கோஷம் சந்தர்ப்பவாத அரசியல் : வைகோ, சீமான்