கூட்டு எதிரணி உருகிக்கொண்டிருக்கின்றதென, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கூட்டு எதிரணியைச் சேர்ந்த இருவர், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து, அவ்வணியைச் சேர்ந்த இன்னும் சிலர், அரசாங்கத்துடன் விரைவில் இணைந்துகொள்வார்களெனவும், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை சிறிகொத்தாவில்,நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்து வருகிறது. இந் நிலையில், உழைக்கும் மக்களை மேலும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான பல நல்ல திட்டங்கங்களை உருவாக்கியுள்ளோம். அவற்றினை விரைவில் அறியத் தருவோம். நல்லாட்சியில் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், 2020ஆம் ஆண்டில் 10,000 ரூபாயாக உயர்த்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

0 Responses to நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்து வருகிறது - ரஞ்சித் மத்தும பண்டார