தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகளை உள்ளடக்கிய தீர்வுத் திட்ட முன்மொழிவு வரைவு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வைத்திய கலாநிதி ப.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட திட்ட முன்மொழிவு வரைவில் சில திருத்தங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்றப்பட்ட திட்ட முன்மொழிவு வரைவு சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறிள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு, அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே, தீர்வுத் திட்ட முன்மொழிவு வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு யோசனை வரைவு ஏகமனதாக நிறைவேற்றம்!