Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீன விஜயம் வெற்றியளித்துள்ளது: ரணில்

பதிந்தவர்: தம்பியன் 11 April 2016

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரச உயர்மட்டத் தூதுக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பியது.

குறித்த விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்வது அவசியமாகின்றது. எமது இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல், அதனை பிரதானப்படுத்தியதாகவே அமைந்தது.

நாட்டில் ஊழல் மோசடியை இல்லாமல் செய்து, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதாக வாக்குறுதியளித்தே நாம் ஆட்சிக்கு வந்தோம். அந்தவகையில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to சீன விஜயம் வெற்றியளித்துள்ளது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com