தமிழ் மக்கள், மீண்டுமொரு யுத்தத்தை விரும்பாத நிலையில், தெற்கின் அரசியல் சக்திகள் சிலவற்றுக்கே , யுத்தமொன்றின் தேவையுள்ளது என வட மாகாண சபைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அன்மையில் சாவகச்சேரிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலக நாடுகள் பலவற்றில், புலிகளின் உறுப்பினர்கள் தங்கியிருக்கின்ற போதினும், பிரபாகரன் இல்லாத சூழலுக்குள் ஆயுதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு வேறு யாராலும் முடியாது. அவ்வாறான நிலையில், தெற்கைச் சேர்ந்த சிலஅரசியல் சக்திகள், அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நாட்டில், மீண்டுமொரு யுத்தம் உருவாகப்போகிறது என அச்சமூட்டும் கருத்துக்களைத் தெரிவிப்பது, அவர்களுக்கே அந்த யுத்தத்தின் அவசியம் காணப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்றார்.
அரசியல் இலாபம் விரும்புவோரின் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் மீண்டும் ஒரு யுத்தத்தினை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் எனும் கருத்தினை மேலும் வலியுறுத்தினார்.
இது இவ்வாறிருக்க, ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மே 5 ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர், ஒப்படைக்கலாம் என பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மீண்டுமொரு யுத்தத்தினை தமிழ்மக்கள் விரும்பவில்லை - சி.வி.கே. சிவஞானம்