Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு   மக்களுக்கான  65000 வீடுகளை அமைக்கும்   திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மீதாக ஏற்பட்ட சர்ச்சசைகள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான விசேட குழுவொன்று, இத்திட்டம் குறித்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே இத் திட்டம் முன்னனெடுக்கப்படலாமெனவும் அறிய வருகிறது.

வடமாகாண முதலமைச்சர் உட்பட பலர்  மேற்படி திட்டம் குறித்தும், அதன் செயலமைப்புக்கள் குறித்தும் கடும் விமர்சனங்களையும், ஆட்சேபனைகளையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், இத் திட்டத்தில் செயற்பட முடியாது போன உள்ளுர் கட்டுமான நிறுவனங்கள் சிலவற்றுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களினால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவும் இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கலாமெனவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

0 Responses to 65000 வீடுகள் அமைக்கும் திட்டம் இடைநிறுத்தம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com