Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை நீக்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத, ஒழுங்குமுறையற்ற மீன்பிடி குறித்து எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வெளிப்படுத்த தவறியமையை அடுத்து, இலங்கை மீது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதியிலிருந்து மீன் ஏற்றுமதித் தடை அமுலுக்கு வந்திருந்தது.

மேற்படி தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியதிலிருந்து இலங்கை மீன்பிடிப் பொருட்களின் ஏற்றுமதி பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டில் 35.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை மீன்பிடிப் பொருட்களின் ஏற்றுமதி காரணமாக 163.1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களே கிடைக்கப்பெற்றிருந்தது. எனினும், 2014ஆம் ஆண்டில் இலங்கை மீன்பிடிப் பொருட்களின் ஏற்றுமதி காரணமாக 252.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மீன் ஏற்றுமதிக்கான இலங்கை மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com