பல்கலைக்கழகங்களில் தொடரும் பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட விடயங்களைக் கட்டுப்படுத்தி பல்கலைக் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்டவரைவு தயாரிக்கப்பட்டு இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பல்கலைக்கழங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பால் நிலை வன்முறைகளைத் தவிர்த்தல்' எனும் தொனிப்பொருளில் கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை உயர்மட்டப் பேச்சு ஆரம்பமானது. இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமான முறையிலேயே கருதப்படுகின்றது. இந்த சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயற்படுவோர் அல்லது அதனை மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவே பொலிஸாரும் இருக்கின்றனர்.
ஆனால், இந்தச் செயற்பாடானது நாட்டில் இருக்கும் பல்கலைக்கழங்களுக்குள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனாலேயே, பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறைகள் என்பன அங்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்புக் கூறவேண்டும். இவர்களே நாட்டின் சட்டத்தை பல்கலைக்கழகத்திலும் உறுதிசெய்ய வேண்டும்.
அத்தோடு, தற்போது நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களின் கட்டமைப்புக்களும் 1942ஆம் ஆண்டு இலங்கையின் வரை படத்தைக்கொண்டே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையும் மாற்றமடைய வேண்டும்.
அந்தவகையில், இலங்கையில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பொலிஸாருக்கான பல்கலைக்கழகத்தை ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களின் கட்டமைப்புக்கு ஏற்றவிதத்தில் நிர்மாணிக்குமாறு நான் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில், ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக்கழகங்களே அமெரிக்காவினதும் இங்கிலாந்தினதும் பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கேற்ப கட்டப்பட்டுள்ளன.
எதிர்க்காலத்தில் இலங்கையிலும் இதுபோன்ற பல்கலைக் கழகங்களே நிர்மாணிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது சட்டவரைபொன்றும் தயாரிக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் வெளியிடப்படலாம்.” என்றுள்ளார்.

0 Responses to பல்கலைக்கழகங்களில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக புதிய சட்டம்: ரணில்