Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்றத்தின் நேற்றைய  செவ்வாய்க்கிழமை(05) அமர்வு, புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அரசியலமைப்புப் பேரவையாக, மாற்றம் பெற்றது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டமும் இடம்பெற்றது.

பேரவையின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழுவினரும், ஏழு பேர்கொண்ட உப தலைவர்கள் குழுவும் தெரிவாகியது. ஆயினும் இவ்விரு குழுக்களிலும்,  முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய அரசியமைப்புக்கான பேரவை நாடாளுமன்றத்தில் உருவாக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com