Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரனில் - மஹிந்த சந்திப்பு!

பதிந்தவர்: தம்பியன் 06 April 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோருக்கிடையிலான குறுகிய நேரச் சந்திப்பொன்று  நேற்று செவ்வாய்க்கிழமை,  இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிப் பிரதமர் காரியாலயத்தில் இடம் பெற்ற இச் சந்திப்பின்போது, மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் பங்கு கொண்டதாகவும், தெரிய வருகிறது.

சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்ற இச் சந்திப்பில், குறைக்கப்பட்டுள்ள  நாட்டின் இராணுவப்  பாதுகாப்பு, மற்றும் தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ்பாதுகாப்புக்கு மாற்றப்படுவதும் குறித்து மகிந்த ராஜபக்‌ஷ உரையாடியுள்ளதாக அறியப்படுகிறது.

ஆயினும் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவானது,  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மட்டுமன்றி,  ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இம் முடிவுக்கு பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

0 Responses to ரனில் - மஹிந்த சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com