Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் கொண்டுள்ளார். எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நீங்கள் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டது போல 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடுமா?“, என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இரா.சம்பந்தன், “அது என்னுடைய கணிப்பு. தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவது நான் அல்ல. தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளுவதில் ஒரு ஒழுங்கு இருக்கின்றது. சில கருமங்கள் நடைபெற வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார். மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்துள்ளார். அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு விரும்புகின்றார் என்பது எனது கணிப்பு. அவருக்கு உதவியாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்திருக்கின்றார். அவருக்கும் அதே சிந்தனை இருக்கின்றது என்பது எனது கணிப்பு. இந்த இரண்டு பகுதிகளும் ஒரு பெரும்பான்மையை தாங்கள் அடையாவிட்டாலும் கூட எங்களுடைய உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள்.

ஆனபடியால் இந்தக் கருமத்தில் தாமதம் ஏற்படவில்லை. விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்தக் கருமம் இந்த வருடத்துக்குள் முடிவடைய வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. அவ்விதமாக முடிவடைவது நல்லது என்று நான் நினைக்கின்றேன். அவ்விதம் முடிவடைந்தால் பிரச்சினை நீடிக்கப்படாமல், குழம்பாமல் நாங்கள் தீர்க்கலாம். ஊடகங்கள் இதைக் குழப்பக் கூடாது. ஊடகங்களின் சில கேள்விகளும், கருத்துக்களும் இதைக் குழப்புவதற்காக கேட்பது போன்று இருக்கின்றது. அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ” என்றுள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காண மைத்திரி விரும்புகின்றார்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com