Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில் வடக்கில் காணாமற்போன மூன்று தமிழ் இளைஞர்கள் மாலைதீவு சிறையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளில், மூன்று தமிழ் இளைஞர்களும் அடங்குகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதி மோதல்களின் போது காணாமற்போனதாக அவர்களது பெற்றோர்களினால், மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக காணாற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த மூவரும் 2008ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 கைதிகளின் பெயர் விபரங்களில் குறித்த மூவரும் உள்ளடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 Responses to காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் மாலைதீவு சிறையில் இருந்தமை உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com