தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஓரணியில் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே அதிகாரங்களை முழு அளவில் கோர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மண்டூர் - கணேசபுரத்தில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணை வளாகத் திறப்பு விழா கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "நாங்கள் தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21 பேரடங்கிய வழிநடத்துக் குழு நிர்ணயிக்கப்பட்டு அதனுடைய முதல் அமர்வு இடம்பெற்று இம்மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூடவுள்ளது.
அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றோம். பிரேமதாஸ காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மஹிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. சர்வகட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். வடக்கு மாகாகண சபையும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். அரசியல் சாசன குழு என்பது பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், இந்தக் குழுவினர் மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசிடம் கொடுக்க இருக்கின்றார்கள்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தோர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரிக்கப்படாத ஒற்றுமையான இலங்கை நாட்டுக்குள் முழுமையான விசுவாசமான இறைமையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றஅதிகாரப் பகிர்வின் ஊடாக, விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிறப்புரிமை உறுதி செய்யப்பட்டு, சமமாக - சமத்துவமான - சமாதானமாக வாழக்கூடிய அடிப்படையை எமது மக்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான - நிலைநிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அந்தத் தீர்வு விரைவில் ஏற்பட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
விசேடமாக தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம். எங்களுடைய பலம் ஒற்றுமையில்தான் தங்கியிருக்கின்றது. அதேவிதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக - ஒருமித்து நிற்க வேண்டும். உங்களுடைய பலமும் அதில்தான் இருக்கின்றது.
இரண்டுக்கும் மேலாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். அந்த அதிகாரப் பகிர்வின் பெறுமதியை நாங்கள் முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தால் தமிழ் - முஸ்லிம் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.
தந்தை செல்வநாயகம் டட்லியுடனும் பண்டாவுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தார். அவர் தமிழ் மக்களுக்காக மட்டும் இந்த ஒப்பந்தங்களைச் செய்யவில்லை. தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார். 1987 இல் ராஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் மக்கள் - முஸ்லிம் மக்கள் என்றுதான் அந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அஷ்ரப்பின் காலத்தில் இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்களுடன் பேசியிருக்கின்றோம். நீண்ட பேச்சுக்களுக்குப் பின் நாங்கள் சில ஒப்பந்தங்களுக்கு வந்திருக்கின்றோம். 2000ஆம் ஆண்டில் சந்திரிகாவினால் முன்வைக்கப்பட் பிரேரணைகளில் - அஷ்ரப் உயிருடன் இருந்த காலத்தில் நாங்கள் பேசிய விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
அந்த விடயங்களைப் பொறுத்தவரையில்கூட பல கருமங்களில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். எங்களுடைய உடன்பாடுகள் இப்போதும் பிரதிபலிக்கின்றனவையாக இருந்திருக்கின்றன. ஆகவே, நீதியில் - உண்மையில் அவை செயற்படுத்தப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம்கள் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். ஆகவே, ஒருமித்த ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எங்களது கடமை. எதிர்வரும் காலத்தில் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் முன்னேறுகின்றதாக இருக்கவேண்டும். தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் - முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு அதிகாரங்களைக் கோர வேண்டும்: சம்பந்தன்