இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பரவலாக்கமே தீர்வாக அமைய முடியும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே ஜேர்மனி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானது. இந்த நல்லாட்சியில் அது நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வருகின்றது.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்திற்கே, கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையினூடாக மக்களின் ஆணையைப் பெற்றிருக்கின்றது. இதனடிப்படையிலேயே தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு விரும்புகின்றது.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த அடிப்படை அன்றாடப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்'' என்றுள்ளார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜேர்மனி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, "சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு தமது நாடும் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

0 Responses to சமஷ்டித் தீர்வுக்கு ஜேர்மனி ஆதரவு; த.தே.கூ.விடம் ஜேர்மனி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு!