Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் முதல் கோப்பு கை எழுத்தாகியது. பின்னர் அடுத்தடுத்து பல கோப்புகளில் கை எழுத்திட்டார் ஜெயலலிதா.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில், தலா 14 அமைச்சர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பதவி ஏற்பு விழா மிகக் குறுகிய நேரத்தில் முடிவடைந்த நிலையில், ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகம் கிளம்பினார்கள். அங்கு அவரவர் அறையில் அவரவர் பணிகளைத் துவங்கிய நிலையில், ஜெயலலிதா பல கோப்புகளில் கை எழுத்திட்டார்.

அது 4 முக்கிய கோப்புகள் என்று தெரிய வருகிறது. முதலாக அங்கன்வாடி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் உத்தரவுக் கோப்பு ஒன்று என்று தெரிய வருகிறது. பின்னர் மீதம் என்ன கோப்புகளில் கை எழுத்திட்டார் என்பதுக் குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்றும், அவைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதாவின் முதல் கோப்பு கை எழுத்தாகியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com