Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும், எதிர்காலத்தில் முப்படை முகாம்களுக்குள் அவரை அனுமதிப்பதில்லை என்றும் முப்படையினர் எடுத்திருந்த முடிவு நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை கடுமையான சொற்களால் திட்டினார். இது குறித்த காணொளி சமூக இணையத்தளங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் அவரை அனுமதிக்கப்பட கூடாது எனவும், முப்படையினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

0 Responses to கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின் தடை நீக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com