புதிய அரசியலமைப்பினூடு பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளோடு பகிர்வது தொடர்பில் அரசாங்கம் புதிய கோணத்தில் பரிசீலிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்படின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஜனநாயகத்தை பலப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள அவர், நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் தீர்வை பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிசீலனை: விஜயதாச ராஜபக்ஷ