Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த வெசாக் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரெஜினோல்ட் குரே கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் அனைத்து மக்களும் இன, மத, மொழி வேறுபாடு இன்றி சமாதானமாக வாழ வேண்டும் என்றே புத்தர் போதித்தார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்நிகழ்வில் அவர்களுக்கு பசுக்களை வழங்கியுள்ளோம். இது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். இந்துக்களுக்கு பசு தெய்வ ரூபம் என்பதால் அவற்றை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யுமாறு இந்து அமைப்புக்கள் கோருகின்றன. இதனையே நானும் விரும்புகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் போராளிகள் இராணுவத்தோடு இணைந்து செயற்பட வேண்டும்: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com