Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரையும் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உண்டு என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட், சம்பூரில் கடற்படை அதிகாரியொருவரின் அத்துமீறலை கடும் தொனியில் சுட்டிக்காட்டிய சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டபோது அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள லக்ஷ்மன் கிரியெல்ல, “முதலமைச்சர் கோபமாக பேசிவிட்டார் என்பதற்காக இராணுவ முகாம்களுக்குள் அவர் நுழையத் தடைவிதித்து இராணுவத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால், முதலமைச்சருக்கு இராணுவ முகாம்களுக்குள் நுழைய எந்தவித தேவையும் இல்லை.

அதே நேரம் பதிலுக்கு இராணுவத்தினர் எந்தவொரு பாடசாலைக்குள்ளும் நுழையக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டால் இராணுவத்தினர் என்ன செய்ய முடியும்? ஏனெனில், அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.” என்றுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வகையில் தீர்மானங்களை எடுக்க முடியாது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. ஜனாதிபதி வந்த பின்னர் இதுகுறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் முதமைச்சருக்கு உண்டு: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com