Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பி வைத்தார். தேர்தலில் கட்சிகள் வெளியிட்டு இருக்கும் அறிக்கைகளை எப்படி செயல்படுத்துவோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நெறிமுறைப்படுத்தி உள்ளது.

அதன் படி தற்போது அறிவித்திருக்கும் சலுகைகள் மற்றும் இலவசங்களை எப்படி எந்த வருவாயின் மூலம் திமுக, அதிமுக கட்சிகள் நிறைவேற்றப் போகின்றன என்று இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

0 Responses to ஜெயலலிதா, கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com