இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலமான நட்புறவொன்று கட்டமைக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கும்பமேளா விழாவை முன்னிட்டு இந்தியாவின் மத்திய பிரதேச உஜ்ஜேனில் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் நேற்று சனிக்கிழமை காலை பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாவது, “இந்து மற்றும் பௌத்த மதங்கள் பாரதத்திலிருந்து உலகிற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய சொத்துக்கள். பிரச்சனைகள் நிறைந்த தற்கால சமூகத்திற்கு இம்மதங்களின் தேவை முன்பொருபோதும் இல்லாத அளவில் உணரக்கூடியதாக உள்ளது. மேலைத்தேய நாடுகள் இம்மதங்கள் தொடர்பில் காட்டும் கரிசனையின் மூலம் அதனைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
கீழைத்தேய தர்மங்களின் சிறப்பு அம்சமான இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கின்ற உறவினை தக்கவைத்தவாறு இலங்கையை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்காக எம்முடைய அரசாங்கமும் செயற்படுகின்றது.
அத்தோடு, இயற்கைப் பசளையை உபயோகப்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் நச்சுத்தன்மையற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றோம். இந்து மற்றும் பௌத்த மதங்களின் போதனைகளின்படி இயற்கையுடன் ஒருமித்த சிறந்ததொரு, சமூகத்தை உருவாக்குவதற்காக நீண்டகாலத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
12 வருடங்களுக்கு ஒருமுறை அனுஷ்டிக்கப்படுகின்ற கும்பமேளா பூஜை தினத்தில், மக்களின் ஆன்மீக எழுச்சியை நோக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற இம்மாநாட்டுக்கு என்னை அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசினால் வழங்கப்பட்ட சிறப்பான உபசரிப்பிற்கும் எனது நன்றிகள்.” என்றுள்ளார்.

0 Responses to இந்திய - இலங்கை நட்புறவுக்கு இந்து - பௌத்த மதங்களே அடித்தளமாகும்: ஜனாதிபதி