Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் எந்தவித தங்குதடையுமின்றி வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, கொலன்னாவை பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் பற்றி நேரில் ஆய்வு செய்வதற்கான ஜனாதிபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

முதலில் வெல்லம்பிட்டி பிரதேசத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்கள் தங்கியுள்ள வெல்லம்பிட்டி வித்தியாவர்தன வித்தியாலத்திற்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.

மக்கள் மத்தியில் சென்று தனிப்பட்ட ரீதியில் ஒவ்வாருவரிடமும் விபரங்களை கேட்டறிந்த அவர், மக்களுக்கு, வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பரீட்சித்துப் பார்த்ததுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் குறைபாடுகள்பற்றி விசாரித்தார். தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி இதன்போது மக்கள் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தார்கள்.

துரிதமாக இந்நிலைமைகள்பற்றி கண்டறியுமாறு உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை ஒழுங்காகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீதொட்டமுல்ல தர்மோதய விகாரையில் தங்கியுள்ள மக்களை சந்திப்பதற்காக புறப்பட்டார். அவர்களிடமும் நலன்விசாரித்த ஜனாதிபதி, அதன் பின்னர் கொலன்னாவ நாகவனாராம விகாரைக்குச் சென்று அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசு பாடுபடுவதாக இம்மக்களை சந்தித்த ஜனாதிபதி குறிப்பிட்டார்.

0 Responses to இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் - ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com