Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை எதிர்ப்பார்த்து அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தேன் என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ பரபரப்பாக பேசியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, ‘மக்கள் நலக்கூட்டணிக்கு தோல்வி ஏற்படும் என எதிர்பார்த்தேன். ஏனெனில், பிரசாரங்களின் இறுதி 3 நாட்களில் மக்களிடம் தேர்தல் குறித்து ஆர்வமும் எழுச்சியும் குறைந்து காணப்பட்டது.

மக்களின் மனநிலையை என்னால் நன்கு உணர முடியும். அப்போதே மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை எனது தொண்டர்களிடம் கூறினேன். எனவே, தோல்வியை எதிர்ப்பார்த்து அதனை முழுமையாக எதிர்க்கொள்ளவே தயாராக இருந்தேன்.

மக்கள் நலக்கூட்டணி தோல்வியை சந்தித்தது எதிர்பார்த்தது தான். ஆனால், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் தோற்பார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை.

இருவரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு சூழல் நிலவி வரும்போது, கோவில்பட்டி தொகுதியில் நான் போட்டியிட்டுருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள்’ என வைகோ தெரிவித்துள்ளார்.

0 Responses to நாங்கள் ‘தேர்தலில் தோற்போம் என ஏற்கனவே தெரியும்’ – வைகோ தடாலடி பேட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com