சொந்தத் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை கேட்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப்பெற்றத் தொகுதி ஆர்.கே.நகர் தொகுதி. இந்த தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரித் தொகுதியாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்தத் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்கள் செயல்படுவார்கள் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அதன் படி ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தண்டையார் பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது குறைகளைத் தெரிவித்து மனுக்களை அளிக்கலாம் என்று அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதோடு, வாரம்தோறும் செவ்வாய் கிழமை மனுக்களை முதலமைச்சர் தனிப்பிரிவின் அலுவலர் பெற்றுக்கொள்வார் என்றும், அது தமது கவனத்துக்கு வர சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to சென்னை ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை கேட்க சிறப்பு ஏற்பாடு: ஜெயலலிதா