Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பிலான விசாரணை ஆகியவற்று உதவும் நோக்கில் இரண்டு ஆரம்ப விசாரணை நீதிமன்றங்களை அமைப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அவசியமான ஆவணங்கள் சில காணமற்போயுள்ளதாக, இது தொடர்பில் இராணுவத் தலைமையகம் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கோரும் சில ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.

0 Responses to லசந்த, எக்னெலிகொட விவகாரம்; ஆரம்ப விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இராணுவம் முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com