Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை!

பதிந்தவர்: தம்பியன் 21 June 2016

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டிகளை தன் வசம் வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள உடுவே தம்மாலோக தேரருக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.

யானைக் குட்டிகளை சட்டவிரோதமன வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், தான் நிரபராதி என தேரர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், ரூபா 100 இலட்சம் (ரூபா ஒரு கோடி) கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 Responses to உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com