Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பவ்ரல் (paffrel) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்த விடயம் குறித்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சார்பாக செயற்படவில்லை என்று உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தல்கள் காலதாமதமானால் சட்ட நடவடிக்கை; பவ்ரல் எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com