இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி மந்தகதியில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது, "இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொற்ப அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தினால் நிறைவேற்றக்கூடிய விடயங்கள்கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு, போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமற்போனோர் விவகாரம் என்பனவற்றில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது: சுமந்திரன்