Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மூட்டு மற்றும் முதுகு வலி உபாதைகள் அவரை வதைத்து வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கடந்த சில வருடங்களாக சிறுநீரத் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு என்று அழைத்து வரப்பட்டு வந்த பேரறிவாளனுக்கு கடந்த சில நாட்களாக மூட்டு வலியும், முதுகு வலியும் வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து இவரை வேலூர் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

ஆனால், வேலூர் அரசு மருத்துவ மனையில் முடநீக்கியல் சிகிச்சைகள் மேற்கொள்ளும் வசதி இல்லை என்பதால் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to பேரறிவாளனுக்கு மூட்டு மற்றும் முதுகு வலி உபாதைகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com