Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்கா அழைத்துள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக் குழு நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறே எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை அரசாங்கம் சார்பில், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் பங்கேற்கவுள்ளார்.

அமெரிக்கக் காங்கிரஸின் கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் பேசப்படவுள்ளது. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரசாத் காரியவசம் ஆகியோரிடம் அமெரிக்கக் காங்கிரஸினர் கேள்விகளை எழுப்பி, விடயங்களை அறிந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலுக்குச் செல்லும் எம்.ஏ.சுமந்திரன், தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

0 Responses to இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பிலான உரையாடலுக்காக எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com