ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வில், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இன்று புதன்கிழமை முன்வைக்கவுள்ளார்.
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டினை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்தினை அடியேற்றி இலங்கை முன்நகர்ந்துள்ளதா அல்லது அதன் செயற்திட்டங்கள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக என்பது தொடர்பில் சையிட் அல் ஹூசைன், தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, குறித்த அறிக்கையின் பிரதியொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளியாகியிருந்தது. அதில், இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

0 Responses to இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. ஆணையர் சையிட் அல் ஹூசைன் இன்று முன்வைப்பார்!