சீனிக்கான வரியை அதிகரிக்கும் யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாகவும், எனினும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளில் சீனிக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மென்பானங்களில் சீனியின் அளவைக் குறிக்கும் வர்ண குறியீடுகளை அறிமுகப்படுத்தும் சட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை: ராஜித சேனாரத்ன