Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதால், அது இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அதில், “பிரித்தானியா ஐரோப்பிய சந்தையில் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஏனெனில், அந்த சந்தைக்கு நாம் 40 வீதம் ஏற்றுமதி செய்கின்றோம். ஆகவே, பிரித்தானியா பிரிந்து செல்வதால் பொருளாதார ரீதியிலான பாதிப்பு ஏற்படலாம். ஏற்றுமதி குறைவடையலாம். இதன் தாக்கம் கொழும்பில் ரீ-ஷர்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்படாது. வர்த்தக வலயங்களில் தூரப் பிரதேசங்களிலுள்ள கிராமத் தொழிற்சாலைகளுக்கே பாதிப்பு ஏற்படும்.

பிரித்தானியாவுடன் தனியான உடன்படிக்கையொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்வதற்கு எண்ணியுள்ளோம். அந்த உடன்படிக்கையை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதை தற்போது கூற முடியாது. ஏனெனில், பிரித்தானியா விலகியவுடன் நிதிச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்டர்லிங் பவுணின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. எமது வெளிநாட்டு இருப்பில் 10 வீதம் ஸ்டர்லிங் பவுண்களே உள்ளன. எம்மைப் போன்றே ஏனைய நாடுகளுக்கும் இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதால் இலங்கைக்கு பாதிப்பு: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com